ஜீவா :


தமிழ் சினிமாவில் தனக்கு செட் ஆகும் திரைப்படங்களை மட்டும் தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் ஜீவா.இவர் சமீபத்தில் வெளியான 83 படத்தில் கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்தாக நடித்திருந்தார்.1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இந்திய அணியை கபில் தேவ் தலைமை தாங்கினார். இதனை மையமாக கொண்டு 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.






83 அனுபவத்தை பகிர்ந்த ரீல் ச்சீகா :


83 திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜீவாவை அனுகிய பொழுது , படக்குழுவினர் அவரிடம் ஆடிஷன் கேட்டிருக்கிறார்கள். இது போன்ற அனுபவம் தனக்கு இல்லை என ஜீவா மறுத்தாலும் படக்குழுவினர் ஜீகா மாதிரி பேசுங்கள் போதும் என்றார்களாம் . சிறு வயதில் இருந்தே  கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்தை பார்த்து வளார்ந்தவன் நான் , என்னால் முடியும் என ஜீவா எவ்வளவோ கூறியும் , இறுதியில் ஆடிஷன் கொடுக்க வைத்துவிட்டார்களாம் படக்குழு. ஆடிஷன் கொடுத்து முடித்துவிட்டு  ஃபிளைட்டில் அமர்ந்திருந்தவரை எதிர்பாராத விதமாக சந்தித்திருக்கிறார்  சிவராம கிருஷ்ணன். அவரிடம் நடந்தவற்றை கூறினாராம் ஜீவா.
நான்தான் ச்சீகா சார் ரோலில் நடிக்க போகிறேன் என்றதும் , உடனே சிவராம கிருஷ்ணன்  கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்திற்கு கால் செய்து , ச்சீகா நான் ஜீவாவோடு இருக்கிறேன்..அவர்தான் உன் ரோல் பண்ண போறாராம் என கூற , உடனே அவர் “ யார் ஜீவா..அவன் என்ன ஆக்டரா ? என கேட்டிருக்கிறார். அதன் பிறகு அதே நாளில் இருவரும் ஈ.ஸி.ஆரில் சந்தித்து படத்தின் கதை குறித்து நிறைய பேசியிருக்கின்றனர்.