தன்னை விஷம் கொடுத்து கொல்ல  முயன்றதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தெலுங்கில் 1989 ஆம் ஆண்டு சிவா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ‘ஜே.டி.சக்கரவர்த்தி’. 25க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேசமயம் சர்வம், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி, ஜீரோ, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களில் ஜே.டி.சக்கரவர்த்தி நடித்துள்ளார். அதேபோல் இந்தி, மலையாளம் படங்களிலும் அவர் நடித்துள்ளார். 


இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜே.டி.சக்கரவர்த்தியை தெலுங்கு நடிகை விஷ்ணுபிரியா காதலிப்பதாக தகவல் வெளியானது.  இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. ஆனால் எங்களுக்குள் காதல் இல்லை என ஜே.டி.சக்கரவர்த்தி மறுத்தார். 


இப்படியான நிலையில் ஜே.டி.சக்கரவர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், “சில மாதங்களுக்கு முன்பாக எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  சிகரெட், மது, போதைப்பொருள் போன்ற தீய பழக்கம் என்னிடம் இல்லாத போது எப்படி இது ஏற்பட்டதே என தெரியவில்லை. மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் இருக்கவே நிறைய இடத்தில் சிகிச்சை எடுத்து என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியவில்லை. 


ஏபிபி நாடு செய்திகளை உடனுக்குடன் டெலிகிராம் செயலி மூலம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி பிழைப்பது கடினம் என்ற நிலை வந்தது. அப்போது ஒரு மருத்துவர் எனக்கு ஏன் மூச்சுத்திண்றல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்து தெரிவித்தார். அதன்படி எனக்கு வேண்டிய ஒருவர் 8 மாதங்களாக கசாயம் ஒன்றை கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்திருப்பதை மருத்துவர் கண்டறிந்து என்னிடம் சொன்னார்" என்றார்.