‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் தனக்கு ட்ரஸ்சே கொடுக்கவில்லை என நடிகர் ஜெயராம் பேசியிருக்கிறார்.
சென்னையில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ஜெயராம், “இந்த மாதிரி அற்புதமான படத்தில் அதனுடைய ஒரு சின்ன பகுதியாக நான் இருந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமை. பொன்னியின் செல்வன் ஒவ்வொரு தமிழனின் ஆழப்பதிந்த திரைக்கதை. எனக்கு இந்த ட்ரஸ்சே நிகழ்ச்சிக்காக கொடுத்தார்கள். ஆனால் படத்தில் எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல.
அதனால புரோமோஷனுக்காகவாது ஒன்று கொடுங்கள் என்று வாங்கி வந்தேன். தாய்லாந்தில் 3.30 மணிக்கு ஷூட்டிங் கிளம்பணும். 18 மணி நேரம் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தா, அப்பதான் மணிசார் நாளைக்கு பேர் பாடி சீன் இருக்கு என்று சொல்வார். உடனே கார்த்தியும், ரவியும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.” என்று பேசினார்.
தொடர்ந்து மக்களிடமும் அவர்கள் உரையாடினர். அப்போது மேடைக்கு வந்த சினேகா என்பவர் பேசும் போது வந்திய தேவன் பல நாடுகளுக்கு ஓலை எடுத்து சென்றிருக்கிறார். ஆனால் இங்கு நான் அவருக்கு ஓலை எடுத்து வந்திருக்கிறேன் என்று படிக்க ஆரம்பித்தார்.
காதல் ஓலை
கரிகாலன் சோழனாய், காவேரியை தேடிவந்து, கடம்பூர் மாளிகைக்குள் காட்சியினை மறைந்திருந்து, குழந்தையில் ஜோதிடம் அறிய சென்று பெண்களின் கண்ணசைவில் மெய்மறந்து நின்று காதலில் விழுந்த வந்தியதேவனை நான் உங்களை காதலிக்கிறேன்” என்று சொன்னார். உடனே கார்த்தி லல் யூ என்று சொல்ல சினேகாவும் லவ் யூ என்று சொன்னார்.
உளமாற காதலிக்கிறேன்.
தொடர்ந்து ஜெயம் ரவியிடம் சென்ற அவர், படை பல கண்டு, தடை பல கடந்து, மூன்றாவது வல்லாதிக்கத்தை நிறுவி உலகை ஆண்டு, உலகை வியக்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டி, அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தின் மாமான்னரான அருண்மொழிதேவரே உங்களை உளமாற காதலிக்கிறேன்.” என்றார். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.