Jayaram: எனக்கு தொப்பை வரணும்னு மணிரத்னம் இதைகூட செஞ்சாரு.. ஓப்பனாக போட்டு உடைத்த நடிகர் ஜெயராம்!

Jayaram: “இரண்டு ஆண்டுகளுக்கு தலையில் முடி இருக்காது குடுமி மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டும், தொப்பையை அதிகரிக்க வேண்டும்” - இது தான் மணிரத்னம் ஜெயராமுக்கு போட்ட கண்டிஷன்

Continues below advertisement

எழுத்தாளர் கல்கி, சோழ மன்னனான 'அருண்மொழி வர்மன்' பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.

Continues below advertisement

500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, விக்ரம் பிரபு என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

பாக்ஸ் ஆபீஸ் வசூல்:

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியன் படமாக உலகளவில் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.80 கோடி எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் முதல் பாகம் ரூ.500 கோடிகளையும், இரண்டாம் பாகம் ரூ.350 கோடிகளையும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் திரைப்படம். 

இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் ஆழ்வார்க்கடியன் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜெயராம். இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜெயராம் ஸ்வாரஸ்யமான தகவலை முன்னதாக பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சிக்ஸ் பேக் :

பொன்னியின் செல்வன் ஆடிஷனில் கலந்து கொள்வதற்கு முன்னர் தெலுங்கில் அல்லது அர்ஜூன் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படத்தில் அல்லுவின் தந்தையாக ஜெயராம் நடிக்க அழைப்பு வந்தது.  இப்படத்தில் அல்லுவின் அப்பாவாக நடிப்பதால் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஃபிட்டாக பாடியை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என கடுமையாக மூன்று மாதம் உடற்பயிற்சி செய்து பாடியை ஃபிட்டாக வைத்திருந்தாராம் ஜெயராம். 

மணிரத்னம் போட்ட கண்டிஷன் :

அந்த சமயத்தில் தான் இயக்குநர் மணிரத்னம் போன் செய்து ஜெயராமை பொன்னியின் செல்வன் ஆடிஷனுக்காக அழைத்துள்ளார். அங்கே சென்ற ஜெயராமிடம், மணிரத்னம் சொன்ன முதல் விஷயம் இரண்டு ஆண்டுகளுக்கு தலையில் முடி இருக்காது குடுமி மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டும், தொப்பையை அதிகரிக்க வேண்டும் என்பது தான். “இவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடையை குறைச்சேனே.. எப்படி திரும்பவும் வெயிட் போடுறது” என்று தான் முதலில் யோசித்துள்ளார். இருந்தாலும் இவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கவும் மனசு வரவில்லை என்பதால் சரி என ஒப்புக்கொண்டாராம் ஜெயராம். 

 

தொப்பை எப்படி வந்தது?

தொப்பை வர வேண்டும் என்பதற்காக தனியாக சாப்பாடு, தாய்லாந்தில் இருக்கும் போது ஜெயராமுக்கு மட்டும் ஹோட்டல் ரூமுக்கு பீர் அனுப்பி வைப்பாராம் மணிரத்னம். பீர் குடித்தால் தொப்பை போடும் என அப்படி செய்வாராம். இந்த ஸ்வாரஸ்யமான அனுபவத்தை ஜெயராம் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 

நடிகர் ஜெயராம் நடித்த ஆழ்வார்க்கடியன் நம்பி கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த ஒரு கேரக்டர். அதை வெகு சிறப்பாக நடித்திருந்தார் ஜெயராம். நடிகர் கார்த்தி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்த காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்து இப்படத்தில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola