தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர் ஜெயராம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். 80 முதல் 90 காலகட்டத்தில் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்த நடிகர் ஜெயராம் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


பன்முக கலைஞர் ஜெயராம்:


நகைச்சுவை மட்டுமின்றி சீரியஸ் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடியவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 'கோகுலம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயராம் அதை தொடர்ந்து பஞ்சதந்திரம், தெனாலி, துப்பாக்கி, உத்தமவில்லன், ஏகன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த பன்முக  கலைஞனின் பிறந்தநாள் இன்று. 


 



சிறந்த விவசாயி :


மிமிக்ரி ஆர்டிஸ்டாக திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த ஜெயராம் பின்னர்  நடிகர், பாடகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞனாக திகழ்ந்து  வருகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். மேலும் விவசாயம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயராம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறார். அவரின் இந்த விவசாய சேவையை பாராட்டி கேரளா அரசு, சிறந்த விவசாயி என்ற விருது வழங்கி கௌரவித்தது. 


ஜெயராம் குடும்பம் :


1990ல் சுபா யாத்ரா திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்த மலையாளத்தின் பிரபலமான நடிகை பார்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் காளிதாஸ் ஜெயராம் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்து வருகிறார். பாவ கதைகள், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம். 


 



சொத்து மதிப்பு எவ்வளவு ?


மிகவும் பிரபலமான நடிகராக விளங்கும் நடிகர் ஜெயராம் சொத்து மதிப்பு சுமார் 40 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ராம்ராஜ் மற்றும் 4 இதர நிறுவனங்களுக்கு விளம்பர பிராண்ட் அம்பாஸடர்கவும், நடிகராகவும் இருந்து வரும் ஜெயராம்  நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் அவரின் ஆண்டு வருமானம் 3.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  ஜெயராம் ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 


அவரின் சொந்த ஊரான கேரளாவின் அங்குமலை என்ற இடத்திற்கு அருகில் சுமார் 7 கோடி மதிப்பிலான ஒரு வீடும், சென்னையில் 4 முதல் 5 கோடி மதிப்பிலான ஒரு வீடும், பெங்களூருவில் 2 பிளாட்களும் உள்ளன என கூறப்படுகிறது.