சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.


சைரன்


Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.


இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார்.


நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திக்ரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டுள்ளார்.


இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தது குறித்து






சைரன் படத்தில் இரு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அதைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர் இப்படி கூறினார் “ எம்.குமரன் , சந்தோஷ் சுப்ரமணியன் மாதிரியான படங்களில் என்னால் தூக்கத்தில் எழுப்பி என்னை அந்தப் படத்தின் செட்டில் விட்டால்கூட நடித்துவிட முடியும். ஆனால் சைரன் படம் அப்படியில்லை. இந்தப் படத்தில் இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் 15 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இளமையான கேரக்டருக்கும் முதுமையான கேரக்டருக்கும் உடல்மொழியில் சில வித்தியாசங்களைக் காட்ட நான் முயற்சி செய்திருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதை நான் மிகவும் ரசித்தேன்,”




மேலும் படிக்க : Siragadikka Aasai: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை: சிறகடிக்க ஆசையில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான்!


Behind the song: அடடே! இந்த பாட்டுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா? 12பி பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்