தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ எனக்கு ஒரு கெட்டபழக்கம் இருக்கு. நல்ல இயக்குனர்களுக்கு நான் போன் பண்ணி பேச மாட்டேன். அதை இப்போதான் அது கெட்ட பழக்கம்னு நினைப்பேன். மனசுலயே வச்சுக்குவேன். என்ன படம். எப்படிப்பட்ட இயக்குனர் என்று மனதிலே வச்சுக்குவேன்.
வெற்றி மாறனுடன் கூட்டணி:
வெற்றிமாறன் சாரோட படம் பண்ணனும் ஆசை இருந்துச்சு. தைரியத்தை வர வச்சுட்டு அவரைச் சந்தித்து படம் பண்ணலாம் சார்னு கேட்டேன். எனக்கு இது இருக்கு, அது இருக்கு. எல்லாம் முடிச்சுட்டு வர்றேன். கண்டிப்பா நாம பண்ணலாம். அவருடைய கதை ஒன்னு கேக்கப்போறேன் கூடிய சீக்கிரம். தயாரிப்பாளர் திட்டுவாருனு நினைக்குறேன். எதையும் மறக்க முடியாது சினிமாவுல. அவருடைய கதையில பண்றேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
ஜெயம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான ஜெயம் ரவி எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,. மழை, தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தனி ஒருவன் என ஏராளமான ஹிட் படங்களைத் தந்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியா வெளியான இறைவன், சைரன் பெரியளவு வெற்றியைப் பெறாத சூழலில், அவரது நடிப்பில் பிரதர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும், அவர் ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
வெற்றி மாறன் தற்போது விடுதலை 2, வாடிவாசல் என அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். மேலும், வட சென்னை 2ம் பாகமும் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் கவினை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி வெற்றிமாறனின் கதையில் நடிக்கப்போவதாக வெளியான கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.