இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருவதால் நடித்து வருவதால் தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


ஜெயம் ரவி


நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சைரன் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.


கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதனால் ஜெயம் ரவி நடிக்க இருந்த தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு  இரண்டாம் முறையாக தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தனி ஒருவன் 2


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன்.இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன்,  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி  இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போனது.






மணிரத்னம் இயக்கி வந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்ததால் தனி ஒருவன் படம் எதிர்பார்த்த நேரத்தை விட சில காலம் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருவதால் தனி ஒருவன் 2 படம் இன்னும் சில காலம் தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க : Aamir Khan: சமூக பிரச்னையை விட மக்களை மகிழ்விப்பதே முக்கியம்.. சினிமா பற்றி அமீர்கான் பேச்சு


Ethirneechal: ஜனனிக்கும் சக்திக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி... எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?