ரசிகர்களால் ஜாவா சுந்தரேசன் என அறியப்படும் நடிகர் சாம்ஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது நீண்ட நாள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் . மக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட மறந்துவிடுகிறார்கள் என அவர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Continues below advertisement

தவெக குறித்து ஜாவா சுந்தரேசன் 

அறை எண் 305 இல் கடவுள் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் ஜாவா சுந்தரேசன் என அறியப்பட்டவர் நடிகர் சாமஸ். சமீபத்தில் இவர் தனது நிஜப் பெயரை ஜாவா சுந்தேசன் என மாற்றிக்கொண்டார். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசினார். அதில் பேசிய அவர் " எனக்கு நீண்ட நாளாக ஒரு வருத்தம் இருக்கிறது. இங்கு அதீதமான ஒரு பாசம் இருக்கிறது. ஒரு தலைவர் மேல் , ஒரு நடிகர் மேல் , ஒரு அரசியல் தலைவர் மேல் பாசம் . உறவுகள் நட்புமேல் வைக்கும் கண்மூடித்தமான பாசம் .  ஒரு தவறை தட்டிக் கேட்க முடியாத அளவிற்கு கண்மூடித்தனமான பாசம். அரசியல் கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவர் செய்யும் தவறை தட்டிக்கேட்காமல் என் கட்சித் தலைவர் எது செஞ்சாலும் சரியாக தான் செய்வார் என்று அவருக்கா வாதாடுகிறார்கள். அதேபோல் எங்கள் ஹீரோ எது செய்தாலும் சரி என்று மனநிலையில் பேசும் ரசிகர்கள். 

Continues below advertisement

பொள்ளாசி பாலியல் வழக்கில் சம்பந்தபட்ட இளைஞர்களை அவர்கள் பெற்றோர்கள் என்ன கண்டித்தார்கள். அவர்கள் செய்த தப்பிற்கு அவர்கள் முதலில் தண்டிக்க வேண்டாமா. காரணம் குழந்தைகள் மேலிருக்கும் கண்மூடித்தனமான பாசம். நேர்மையாக யார் தப்பு செய்தாலும் தட்டி கேட்க வேண்டும் என்று வாழவேண்டும். இந்த சமூகத்திற்கு இஞ்சினியராகனும் டாக்டராகனும் என்று மட்டும் சொல்லிக் கொடுக்காமல் நேர்மையாக வாழ சொல்லிக் கொடுக்க வேண்டும்." என்று சாம்ஸ் பேசியுள்ளார்.