மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுக நிர்வாகிகள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற வருகை தந்தார் . திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினர்.
அதனை தொடர்ந்து வைகோ செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, ”சீமைக்கருவேல நிழலில் ஆடு மாடுகள் தங்காது, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது. தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் ஓட்டுக்காக இயங்குகின்ற கட்சி அல்ல மதிமுக, நாட்டுக்காக இயங்குகின்ற கட்சி, கருவேல மரம் அகற்றுவதால் ஒரு ஓட்டு விழுமா விழாது, தமிழக மக்களை காப்பாற்றுகின்ற கட்சி மதிமுக, தமிழ்நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்க கருவேல மரங்களை அகற்றி வருகின்றோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சிக்கின்றன. ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து குதிரை பேரம் என பேசுகின்றனர்.
கம்பம் தொகுதியில் பம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற தொகுதி உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது திமுக தான். இந்த குதிரை பேரத்தை துவங்கியது திமுகதான். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வைத்தது திமுக. திமுக ஆட்சியில் கரப்சன், கமிஷன், கனெக்ஷன் இருந்தது. தவெகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளோம். இந்த ஐந்து ஆண்டும் மட்டும் அல்ல அடுத்த ஐந்து ஆண்டும் விஜய்தான் தமிழக முதல்வர். எங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான்” என்றார்.
தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தபோது, கரப்சன், கமிஷன், கனெக்ஷன் தெரியவில்லையா என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆன வைகோ, “நீங்கள் மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா? நாங்களும் (செய்தியாளர்களிடம்) கேள்வி கேட்போம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் வைகோ வாக்குவாதம் செய்தார். நீங்கள் எந்த பத்திரிகை, நீங்கள் எந்த செய்தியாளர் என செய்தியாளரிடம் கடுமையான வாக்கு வாதம் செய்தார். கேள்வி கேட்ட செய்தியாளரை மதிமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
