ரேஷ்மா மதன்பாண்டியன் நடிப்பில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் அபி டெய்லர். இந்த சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் இதுவும் ஒன்று. ரீலில் மட்டும் ஜோடியாக நடித்து வந்த இவர்கள் ரியல் லைஃப்பிலும் ஜோடியாக சேர்ந்துள்ளனர்.
அபி டெய்லர் சீரியல் 100 வது நாளை கடந்து சென்று வரும் நிலையில், சீரியலின் மீதான எதிர்பார்ப்பை கூட்ட, படக்குழு பல விதமான சுவாரஸ்சியமான சர்ப்ரைஸ்களை புகுத்தி வருகிறது. அசோக்கை டோனியும் மைக்கேலும் சேர்ந்து கடத்துகின்றனர். அவரை அபி காப்பாற்ற செல்கிறார். ஒரு கட்டத்தில் அபியும் வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார்.
இந்த நேரத்தில்தான் அசோக்கையும், அபியையும் காப்பாற்ற பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் வருகிறார். இதன் மூலம் புதிதாக அபி டெய்லர் சீரியலுக்குள் எண்ட்ரி ஆவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஒரு புதிய புரோஜக்ட்டில் நடிக்கிறேன். முழுமையான விவரங்களை சீக்கிரம் வெளியிடுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.