ரஜினிகாந்த் படம் வெளியாகும்போதெல்லாம் அவருக்கு எதிராக படத்தை ரிலீஸ் செய்யாமல்  வேறு தேதியை படக்குழுவினர் சிந்திக்க வேண்டும் என நடிகர், இயக்குநர் ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார். 


நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஜெய் ஆகாஷ். இவர் அடுத்ததாக ‘எக்ஸ் ஆர்மி மேன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. ஹீரோயின்களாக அஷ்மிதா,  அக்சயா நடிக்க, முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, தினேஷ் மேட்னே,  மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜெய் ஆகாஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சாய் பிரபா மீனா இப்படத்தை இயக்குகிறார். 


இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜெய் ஆகாஷிடம், “ பெரிய படம் (ஜெயிலர் படம்) வரும்போது சின்ன படங்கள் எல்லாம் தியேட்டரில் இருந்து தூக்கி விடுகிறார்களே?. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எனக்கு கூட அப்படி ஒரு நிலைமை நடந்துருக்கு. நான் ஹீரோவா நடிச்சி மிகப்பிரமாண்டமாக எடுத்த ‘குருதேவா’ படம் 2005 ஆம் ஆண்டு வெளியாச்சு. அந்த படத்தின் விமர்சனம் கூட என்னை பாராட்டினார்கள். தியேட்டரில் நன்றாக போய்கொண்டிருந்தபோது ரஜினி நடித்த சந்திரமுகி படம் வெளியானது.


இதனால் மற்ற படங்களை எல்லாம் தூக்கினார்கள். என் படமும் அதில் மிஸ்ஸாகி விட்டது. இது எங்கள் கையில் இல்லை. ரஜினிக்கென்று ஒரு மாஸ் உள்ளது. எங்கள் படத்தை விட அவர் படத்தை தான் பார்க்க விரும்புவார்கள். இப்பகூட ஜெயிலர் படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகியும் டிக்கெட் கிடைக்காமல் இருக்குது. அதனால் தலைவர் வருகிறார் என்றால் நாங்கள் ஒதுங்கி வழிவிட்டு தான் ஆக வேண்டும். ரஜினி படத்தோடு எங்கள் படத்தை ரிலீஸ் செய்து போட்டி போட மாட்டோம். ரஜினி படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள். அப்படி என்றால் அன்றைய தேதியில் ரிலீஸ் பண்ண வேண்டிய படத்தின் குழு அதனை சிந்தித்திட வேண்டும்” என தெரிவித்தார். 


மேலும் படிக்க: Jailer Box Office Collecton Day 4: ‘தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா’ .. 4 நாட்களில் ரூ.300 கோடி வசூலை அள்ளிய ஜெயிலர்..!