நடிகர் இம்ரான் கான் மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என்ற கேள்வியே தற்போது பாலிவுட் முழுவதும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 


நடிகர் ஆமீர் கானின் மருமகன் என்ற அடையாளத்தோடு 1988 ஆம் ஆண்டு  கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இம்ரான் கான். இவர் 2008 ஆம் ஆண்டு ஜானே து... யா ஜானே ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து லக், கிட்னாப், டெல்லி பெல்லி, பாம்பே டாக்கீஸ், ஒன்ஸ் அப் ஆன் ய டைம் இன் மும்பை டோபரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 


இதனிடையே எட்டு ஆண்டுகளாக நடிகை அவந்திகா மாலிக்குடன் காதலில் இருந்த இம்ரான் கான் 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு இந்த  தம்பதியினர் இமாரா என்ற மகள் பிறந்தார். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இம்ரான் மற்றும் அவந்திகா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது. 






அதேசமயம் சில வாரங்கள் முன்பு, அவந்திகா தனது இன்ஸ்டாகிராமில் 2022 இல் இருந்து தனக்குப் பிடித்த சில படங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சாஹிப் சிங் லம்பாவுடன்  அவர் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றது. மேலும் சாஹிப்புடன் அவந்திகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் கருத்து தெரிவித்தது இம்ரான் கான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இம்ரான் கான் பிரபல நடிகை லேகா வாஷிங்டன் உடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இருவரும் கைக்கோர்த்தபடி வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இம்ரான் கான் மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என்ற கேள்வி பாலிவுட் ரசிகர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. 


லேகா வாஷிங்டன் தமிழில் ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.