'அந்த ஒரு விஷயம்தான் அப்செட்' ஸ்டார் படத்தில் என்ன பிரச்சினை? மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்
ஸ்டார் படத்தில் நடிக்காமல் போனது ஏன்? அந்த படத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின் மற்றும் ஹரிஷ் கல்யாண். கவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான திரைப்படம் ஸ்டார். இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் ஹரிஷ்கல்யாண். ஆனால், பல காரணங்களால் அந்த படத்தில் அவர் நடிக்க இயலாமல் போனது. பின்னர், அவருக்கு பதில் நடிகர் கவின் அந்த படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், ஸ்டார் படம் பற்றி நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஸ்டார் படத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது. அதில் சிலவை எனது கவனத்திற்கு வந்தது. சில விஷயங்கள் எனது கவனத்திற்கு வரவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்கவில்லை. ஆனால், நாங்கள் பல விஷயங்களை அதற்கு முன்பு செய்தோம். நான் தயாராகினேன். 2020ல் கொரோனா முதல் அலை வந்தது. அந்தாண்டு இறுதியில் நாங்கள் பட வேலையைத் தொடங்கினோம்.
Just In




2021ல் கொரோனா இரண்டாவது அலை வந்தது. அதன்பின்பு, ஒரு ஒன்றரை வருடத்திற்கு எந்த சத்தமும் இல்லை. திடீரென்று அந்த அறிவிப்பு வந்தது. அதன்பின்பு நான் அதை கண்டுகொள்ளவில்லை. முறைப்படி என்னிடம் எதும் கூறவில்லை. இடையில் என்ன நடந்தது? என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், முன்பு என்ன நடந்தது? பின்பு என்ன நடந்தது? என்று எனக்குத் தெரியவில்லை.
முன்பு என்ன நடந்தது? என்று கூறினால் நான் ஒருவரை குற்றம் சொல்வது போல அமைந்துவிடும். முறைப்படி சில விஷயங்களை கூறியிருக்கலாம். ஆனால், அது சொல்லவில்லை என்பதுதான் எனக்கு அப்செட். என்னால் பொய்யாக ஒருவரிடம் பழக முடியாது. எனக்கு படம் வேண்டும் என்பதற்காக ஒரு தயாரிப்பாளரிடம், நடிகரிடம் அப்படி பழக முடியாது. அதேசமயம் ஹிட் கொடுத்துவிட்டார் என்பதற்காக சூப்பர் சார் என்றும் பழக முடியாது. அது அது அந்த இடத்தில் சரியாக இருக்க வேண்டும். ட்ரெயிலர் வந்த போது ஒன்று சொன்னார்கள். படம் வந்த பிறகு ஒன்று சொன்னார்கள். நான் அதை அப்படியே விட்டுவிட்டேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டார் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி அதற்கான போஸ்டர்கள் கூட வெளியானது. அதன்பின்பே கவின் அந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஸ்டார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.