தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் வரிசையில் இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.  இன்று தனது 33-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Continues below advertisement

ஹரிஷ் கல்யாண் நடித்த படங்கள்

முதல் படத்தைத் தொடர்ந்து அறிந்து அறிந்து , சட்டப்படி குற்றம், பொரியாளன் , வில் அம்பு ஆகியத் திரைப்படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண். ஆனால் பெரிய அளவிலான ஒரு அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது என்றால் அது 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் ப்ரேமா காதல் திரைப்படத்தில்தான். இளைஞர்கள் மத்தியில் முற்றிலும் புதிய ஒரு ட்ரெண்டை உருவாக்கியத் திரைப்படம் இது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயகோடி இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் இரண்டாவது பெரிய வெற்றியை ஹரிஷுக்கு வழங்கியது. 2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு திரைப்படம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் என்கிற நடிகரின் மேல் ஒரு பெரிய நம்பிக்கை வைக்க காரணமாக இருந்த படமாக அமைந்தது. தொடர்ந்து வெளியான ஓமன பெண்ணே திரைப்படம் பெரிய வெற்றி அடையவில்லை.

Continues below advertisement

இளைஞர்களின் பல்ஸை புரிந்துகொண்ட நடிகர்

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானாதான் நடிக்க தேர்வு செய்த கதாபாத்திரங்களின் வழியாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை இன்று உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் திரைப்படங்களில் ஹீரோக்கள் பொதுவாக நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்கள். ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளன்று ஆயுஷ்மான் குர்ரானா பற்றிய பேச்சு எதற்காக வருகிறது என்பதுதானே உங்களது சந்தேகம்.

ஆயுஷ்மான் குர்ரானா இந்தியில் நடித்த விக்கி டோனர் திரைப்படத்தின் ரீமேக்கான தாராளப் பிரபு திரைப்படத்தில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண். வெளிப்படையாக இந்த ஒரு காரணமே உள்ளது . ஆனால் வளர்ந்து வரும் புதிய தலைமுறை நடிகர்கள் முந்தைய தலைமுறை நடிகர்கள் செய்த அதே ஸ்டண்ட், அவர்கள் தேர்வு செய்த அதே மாதிரியான ஹீரோவுக்கான பிம்பம்  அதே மேனரிசம் ஆகியவற்றை பின்பற்றாமல் புதிதாக எதையாவது செய்துபார்க்கும் சுதந்திரம் இன்றையத் தலைமுறை நடிகர்களுக்கு இருக்கிறது. அதில் ஓரளவிற்காவது  எதிர்பார்க்கப்படுபவர் ஹரிஷ் கல்யாண் என்று சொல்லலாம்.

லெட்ஸ் கெட் மேரீட்

 தற்போது தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகி வரும் படமான லெட்ஸ் கெட் மேரீட் படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். படத்தின் டைட்டிலைப் வைத்தே இது இன்றைய தலைமுறையினர் அதிகம அச்சப்படும் ஒரு விஷயமான திருமணத்தைப் பற்றியதாக இருக்கும் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து பார்க்கிங், நூறு கோடி வானவில் , டீசல், லப்பர் பந்து ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்