ஃபகத் ஃபாசிலின் தந்தை இயக்கிய இரண்டு படங்களில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஃபகத் ஃபாசில்


மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில் . மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் ரத்திவேலு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் தவிர்த்து தெலுங்குவில் புஷ்பா படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இது தவிர்த்து இரண்டாவது முறையாக வடிவேலுவுடன் ஒரு காமெடி படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.


சத்யராஜ் மடியில் ஃபகத் ஃபாசில்


ஃபகத் ஃபாசிலின் தந்தை ஃபாஸில் தமிழ் , மற்றும் மலையாளத்தில் தொடர்ச்சியாக திரைப்படங்களை இயக்கியவர். விஜய்  நடித்த காதலு.க்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு , பூவே பூச்சூடவா , கற்பூர முல்லை உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் இவர் இயக்கிய மணிச்சித்திரத் தாழு படத்தை தமிழில் இயக்குநர்  வாசு சந்திரமுகி என ரீமேக் செய்தார். நடிகர் சத்தியராஜ் நடிப்பில் இரு படங்களை பாஸில் இயக்கியுள்ளார். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பூவிழி வாசலிலே. இந்த இரு படங்களும் சத்யராஜுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டபோது ஃபகத் ஃபாசிலுக்கு 5 அல்லது ஆறு வயது இருந்திருக்கலாம். அப்போது சிறுவனாக அவர் நடிகர் சத்யராஜுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






குட்டிப்பையனாக இருந்தாலும் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவனின்  பார்த்த மாத்திரத்தில்  ஒருவரால் சொல்லிவிட முடியும் அது ஃபகத் ஃபாசில் என்று. 


ஆவேஷம்


ஜீது மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் தற்போது நடித்து வரும் படம் ஆவேஷம். ஆஷிஷ் வித்யார்த்தி , சஜின் கோபு, மன்சூர் அலிகான்  , ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நஸ்ரியா நஸிம் மற்றும் அன்வர் ரஷித் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். கும்பலங்கி நைட்ஸ், மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த  சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜீத்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ரோமான்ச்சம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆவேஷம் படத்தின் மீது பெரியளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது