உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று WWE இதில், பல வீரர்கள் இருந்தாலும் ரசிகர்கள் அதிகம் விரும்பி ரசிக்க கூடியவர்கள் ஒரு சிலரே. குறிப்பாக தி ராக் என்ற பெயரில் மல்யுத்த சண்டைகள் போட்டு உலகளவில் பெயர் பெற்றவர் டுவைன் ஜான்சன். 90ஸ் கிட்ஸ் பெரும்பாலானோருக்கு இவர் யார் என்று நன்றாகவே தெரியும், அதிலும் இளைஞர்களின் க்ரஷ் என்றே சொல்லலாம்.
ஆனால், பலருக்கும் அவரது உண்மையான பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. jராக் என்றே அழைத்து வருகின்றனர். மல்யுத்த சண்டையில் இருந்து நீங்கி ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான Southland Tales, Rundown, Fast Five, ரெட் நோட்டீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், டுவைன் ஜான்சன் நடித்துள்ள The Samshing Machine என்ற திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்களது பாராட்டுக்களையும் அன்பையும் பொழிந்தனர். படம் முடிந்த பிறகு அங்கு அரங்கம் அதிரும் அளவிற்கு 15 நிமிடங்கள் நிறுத்தாமல் கைதட்டியதை பார்த்து தி ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேரன்பை கண்டு நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக டுவைன் ஜான்சன் சுமார் 27 கிலோ குறைத்துள்ளார். உடல் நெலிந்து போன காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். தி ராக் என்றால் முரட்டுத்தனமான உடலுடன் இருப்பதை பார்த்திருப்பார்கள். இந்த புதிய தோற்றத்தை பார்த்து எப்படி உங்களால் முடிந்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.