Just In





King Of Kotha Twitter Review: மாஸ் காட்டினாரா துல்கர் சல்மான்?.. ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
King Of Kotha Twitter Review: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. அப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை நாம் காணலாம்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. அப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை நாம் காணலாம்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு துல்கர் சல்மான் நடிப்பில் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. மலையாள திரையுலகை சேர்ந்த நடிகராக இருந்தாலும் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், ஐஸ்வர்யா லட்சுமி, அனிகா சுரேந்தர் என பலரும் நடித்துள்ளனர்.
சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த துல்கர் சல்மான், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டியுள்ளதால் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் துல்கர் சல்மான் தீவிரமாக பங்கேற்றார்.இந்நிலையில் இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் காட்சி படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.