தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் முதல் மாநாட்டில் பேசிய அதே விஷயங்களை டைமிங்குடனும் நல்ல ரைமிங்குடனும் விஜய் பேசியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக , பாஜக ஆகிய இரு கட்சிகளை விமர்சிப்பதை தவிர நிலையான அரசியல் நோக்கில் எதுவும் பேசவில்லை. மாறாக தனது சினிமா கரியரை விட்டுவந்ததையே பெருமை பேசினார் .
மார்கெட் போனப் பின் அரசியலுக்கு வரவில்லை
"சில நடிகர்களைப் போல மார்க்கெட் போன பிறகு, அடைக்கலம் தேடி உங்களை நாடி வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராக வந்திருக்கிறேன்." என்று விஜய் கூறினார். தொடர்ந்து " அரசியலுக்கு வந்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்ற பிறகு தான் அரசியல் கட்சியையே தொடங்கியிருப்பதாகவும் பேசினார். விஜய் பேசியது தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலை சுட்டிக்காட்டி தான் என சமூக வலைதளத்தில் விவாதம் தொடங்கியது
விஜய் பேச்சு பற்றி கமல்
இப்படியான நிலையில் திமுக எம்.பி கமல்ஹாசன் சென்னை விமான நிலையில் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது விஜய் பேச்சு பற்றிய பத்திரிகையாளர் கேள்விக்கு கமல் கடுமையாக பதிலளித்துள்ளார் " விஜய் பேசியதில் என் பெயரையோ வேறு யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள். அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு மெயில் போட முடியுமா" என கமல் பதிலளித்துள்ளார்