தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் விஜய். நடிகர் விஜய்யின் வெற்றிப் படங்களில் ஒன்று குஷி. இந்த படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கியிருப்பார். 2000 காலகட்டத்தில் இளமை துள்ளும் கதாநாயகனாக உலா வந்த விஜய்க்கு இந்த படத்தின் கதாபாத்திரமும், கதையும் மிகவும் பொருந்திப் போக படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
விழுந்து விழுந்து சிரித்த எஸ்ஜே சூர்யா:
இந்த படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் 25ம் தேதி குஷி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் ரீ ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. இதில் படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் ஏஎம்ரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது.
அப்போது, படத்தில் இடம்பெற்ற கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடல் வந்தபோது படத்தைப் பார்த்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தார். அதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஷி:
குஷி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இவர்களுடன் மும்தாஜ், விவேக், விஜயகுமார், நிழல்கள் ரவி, நாகேந்திர பிரசாத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். கல்லூரியில் ஒன்றாக படிக்கும் இரண்டு துருதுருப்பான ஆணுக்கும், பெண்ணுக்குமான காதலே படம் ஆகும்.
ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருப்பார். தேவா இசையில் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்குது, மேக்ரினா, ஒரு பொண்ணு ஒன்னு, மொட்டு ஒன்று, கட்டுப்பிடி கட்டுப்பிடிடா, ஓ வெண்ணிலா பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனது.
கட்டிப்பிடி கட்டிப்பிடிடா:
கவர்ச்சிப் பாடலான கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா பாடலில் விஜய் - மும்தாஜ் நடனம் அப்போது மிகவும் பிரபலம் ஆகும். இந்த பாடல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியது. அப்போது இளைஞர்களால் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்ட இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆவதால் மீண்டும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது. இதே படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து குஷி என்ற பெயரிலே எஸ்ஜே சூர்யா இயக்கியிருப்பார். அங்கும் இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
நடப்பாண்டில் ஏற்கனவே விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் குஷி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே படம் அது மட்டுமே ஆகும். அதன்பின்னர், இருவரும் இணைந்து நண்பன், மெர்சல் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் நடித்தனர்.