தி கிரேமேன் படப்பிடிப்பாக அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் தனது மகன்களுடன் கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ( ருஸ்ஸோ பிரதர்ஸ்) இயக்கத்தில் இருக்கும் திரைப்படம் ‘ தி கிரே மேன்’. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஹாலிவுட் மண்ணில் தன்னுடைய இரு மகன்களுடன் தனுஷ் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. தனுஷின் மகன்களான யாத்ரா, லிங்கா இருவருமே கோட் ஷூட் அணிந்து தந்தை தனுஷுக்கு டஃப் கொடுக்கும்விதமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் தனுஷின் ரசிகர்கள் இது அழகான புகைப்படம் என்றும், இதில் தனுஷ் ஒரு அண்ணனாகவே தெரிவதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
திரைப்படத்தின் வாய்ப்பை நான் எப்படி அடைந்தேன் என்று தனக்குத் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். இந்த படத்தின் முலம் கற்றுக்கொள்வதற்கும் ஆராய்வதற்கும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் அவ்வளவு உற்சாகமாக இருப்பதாக அவர் தொடர்ந்து கூறினார். இப்படத்தில் தனுஷுக்கு முக்கியமான பங்கு உள்ளது. அவர் மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட ஒரு கொலையாளியாக நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும், தயாரிப்பில் ஒரு பகுதியாக இருப்பது குறித்தும் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டதற்கு தனுஷ் பதிலளித்தார். தனுஷின் ரியாக் ஷனைப் பார்த்து அவருடன் நடித்த கிறிஸ் எவன்ஸ் மற்றும் ரியான் கோஸ்லிங் உட்பட அறையில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். "நான் மகிழ்ச்சியாகவும் மிகவும் உற்சாகமாகவும் இருந்தேன்," என்று அவர் தொடர்ந்து பேசினார். இயற்கையாகவே, படத்தில் நான் அதிகம் பேச வேண்டியதில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கற்றுக்கொள்வதற்கும் ஆராய்வதற்கும் வாய்ப்புகளைத் தேடினேன்” என்று அவர் சொன்னார்.