தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரைப்படத் துறைகளிலும் வலம் வருபவராகவும் இருக்கும் தனுஷ், தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் ஆகியோரது விருப்பத்திற்கேற்ப கல்லூரிப் படிப்பைப் படிக்காமலே, திரைப்படத் துறைக்குள் நுழைந்தவர். 


ஆரம்ப காலத்தில் வேண்டாவெறுப்பாக திரையுலகில் வந்த தனுஷ், அதன்பிறகு தன் திறமையை பன்முகமாக வளர்த்துகொண்டு தமிழ் சினிமா கடந்து உலக சினிமா வலம் வருகிறார். சமீபகாலமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு : 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், 18 வருடங்களுக்கு இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இருந்து பிரிவதாக தங்களது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர். 


தனுஷ் குறித்து வைரலாகும் புதிய புகைப்படம் : 




ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு பிறகு தனுஷ் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில், தனுஷ் தற்போது ’வாத்தி’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. 


வாத்தி படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ஹைதராபாத் ரெஸ்டாரன்ட் ஒன்றில் தனுஷ் மற்றும் இளம்பெண் ஒருவர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்ணும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, யார் இந்த பெண் என்று அனைவரது மனதிலும் கேள்வி எழுந்து வந்த நிலையில், அந்த பெண் தனுஷின் காஸ்ட்யூம் டிசைனர் என்றும், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்டபிறகு படப்பிடிப்பு தளத்திற்கு கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது. 


அடுத்தடுத்து படங்களில் கமிட்டான தனுஷ் : 


தனுஷ் நடிப்பில் மாறன் மற்றும் ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து, தனுஷ் திருச்சிற்றம்பலம் மற்றும் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண