இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரமாக நடிகர் தனுஷ் வலம் வருகிறார். தனுஷைத் தொடர்ந்து அடுத்தபடியாக அவரது மகன் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. இப்படியான நிலையில் கூடிய விரைவில் தனுஷின் மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரு மூத்த மகன் செல்வராகவன் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டும் இயக்குநராக இருந்து வருகிறார். அதே போல் இளைய மகனான தனுஷ் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உருவான மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் , இந்தி , தெலுங்கு தொடங்கி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர் , பின்னணி பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் கொண்டவர் தனுஷ். போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

நாயகனாக அறிமுகமாகும் தனுஷ் மகன் யாத்ரா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில ஆண்டுகள் முன்பாக அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர் . இந்த தம்பதிகளுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ரா கூடிய விரைவில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் " யாத்ரா நடிக்க வருவதற்காக சிக்ஸ் பேக் வைத்து  தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. அவரது அப்பா தனுஷ் சொல்லும் நேரத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்"என தெரிவித்தார். 

Continues below advertisement

கர

வேல்ஸ் ஃபிலிம் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகிறது. தனுஷ் , மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சமூடு , கே.எஸ் ரவிகுமார் , கருணாஸ் , ஜெயராம் , எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 1990களில் ராமநாதபுரம் மாவட்டத்தை மைக் கதைக்களமாக கொண்டு த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.