தனுஷ் குபேரா ஸ்பீச்
தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் பேச்சு தான் தற்போது சமூக வ் வலைதளங்களில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியுள்ளது. தன்மீதான விமர்சங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் இந்த மேடையில் பேசியிருந்தார்.
" என் படம் வெளியாவதற்கு 2 மாதங்கள் முன்பே என்னைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆனால் தீப்பந்தம் போல் என் ரசிகர்கள் இருக்கும் வரை நான் முன்னேறிக் கொண்டுதான் இருப்பேன். 23 வருடங்களாக என் ரசிகர்கள் எனக்கு வழித்துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை ஒரு செங்கல்லை கூட உங்களால் பிடுங்க முடியாது. தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க. இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமில்லை என்னுடைய கம்பேனியன்ஸ். சும்மா 4 வதந்திகளை கிளப்பிவிட்டு என்னை முடித்துவிடலாம் என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம்." என்று அவர் பேசினார்
லூஸ் டாக் விடும் தனுஷ்
தனுஷ் பேசிய விதத்தை நெட்டிசன்ஸ் அவரை கடந்த வாரம் முதல் ட்ரோல் செய்து வருகிறார்கள். ரஜினியைப் போல் தனுஷ் பேச முயற்சிக்கிறார். படத்தை விட நிஜத்தில் நல்லாவே நடிக்கிறார் என அவரை வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சித்து வருகிறார்கள். முன்பு மேடைகளில் தனுஷ் பேசுவது ரசிகர்களை கவர்ந்தது. குறைவாக பேசினாலும் எண்ணம் போல்தான் வாழ்க்கை என தனுஷ் ஒரு வார்த்தை சொன்னாலும் அது ரசிகர்களின் தாரகை மந்திரமாக மாறியது. சமீப காலங்களில் சினிமா நிகழ்ச்சிகளில் தனுஷின் பேச்சிற்கு இந்த மாதிரியான எதிர்வினைகள் வருவது அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்
சுதாரித்த சிம்பு
அந்த வகையில் முன்பெல்லாம் ஏதாவது ஒன்றை பேசி ட்ரோல் மெட்டிரியலாக மாறியவர் சிம்பு. சமூக வலைதளம் பக்கம் போனே சிம்பு பேசியது வீடியோக்கள் மீம்களாக பறந்தன. இவ்வளவு ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு தற்போது சினிமா நிகழ்ச்சிகள் தான் என்ன பேசுகிறோம் என்பதை நிதானித்து யோசித்து பேசும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது . தக் லைஃப் இசை வெளியீட்டில் சிம்புவின் உரை ஒரு நடிகராக அவர் கடந்து வந்த பாதை அவர் எதிர்கொண்ட சவால்களை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
ஆனால் இப்போது சிம்பு இடத்தில் தனுஷூம், தனுஷ் இடத்தில் சிம்புவும் இருகிறார்கள்