1YearOfBBKarnan: வாள் தூக்கி நின்னான் பாரு.. ஒன் இயர் ஆஃப் கர்ணன்.. தனுஷிற்கு சிலை கொடுத்து வாழ்த்திய மாரி செல்வராஜ்..!

கர்ணன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் நடிகர் தனுஷ், மாரி செல்வராஜ், தாணு ஆகியோர் அதனை கொண்டாடியுள்ளனர்.

Continues below advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் நடிகர் தனுஷை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், “ கர்ணன் திரைப்படம் எனது மனதுக்கு மிக மிக நெருக்கமான திரைப்படம். மாரிசெல்வராஜ், தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றி. இந்தப்படம் இந்தத்தருணத்தில் இப்படி உருவாகியதற்கு காரணமாக இருந்த உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார். 

Continues below advertisement

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கர்ணன். திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்திற்கு பேருந்து வசதி கொண்டுவர அந்த ஊர் சந்திக்கும் போராட்டங்களும், இதற்கிடையில் உள்நுழையும் ஜாதிய ஏற்றத்தாழ்வால் கிராமம் படும் பாடுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. 

தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தின் அந்தப்படத்தின் இயக்குநரான செல்வராகவனும் நடித்துள்ளார்.

 

இதில் தனுஷ் ஒரு கதாபாத்திரத்தில் பழங்குடியின இளைஞராக வருகிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் வில் வித்தை பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். இதில் இரண்டு கதாநாயகிகள் நடித்து வரும் நிலையில், ஒரு கதாபாத்திரத்தில் எல்லி அவரம் ஒரு கதாபாத்திரத்திலும், இந்துஜா ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola