சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். இவர் ராக்கி, சாணிக் காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நடிகர் தனுஷ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்த பூஜை விழாவின் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர் பட குழுவினர். 


 



 


எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்:


"கேப்டன் மில்லர்" படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற படத்தின் பூஜை விழாவில் படக்குழுவினர் மற்றும் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


 






 


இதிலும் வன்முறை உண்டா?


"கேப்டன் மில்லர்" திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க அவருடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், சுமேஷ் மூர், டேனியல் பாலாஜி, குமரவேல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் மதன் கார்க்கி. தமிழ், தெலுங்கு  மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் இப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாகும். பொதுவாகவே அருண் மாதேஸ்வரன் படங்களில் வன்முறை கொப்பளிக்கும். அதனால் இப்படத்திலும் அது போல காட்சிகள் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 


 






 


அடுத்தடுத்து ஹிட் படங்கள் :


நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு இதுவரையில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக வெற்றி பெற்றுள்ளன. கிரே மேன், திருச்சிற்றம்பலம் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக வசூலில் சாதித்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" திரைப்படம் மற்றும் "வாத்தி" திரைப்படம்  என அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி வெளியாகவுள்ளது. தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் கோலாகலமாக உள்ளது. "கேப்டன் மில்லர்"  படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.