தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து


நடிகர் தனுஷ் மற்று ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று  முறை விசாரணைக்கு வந்தது. மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆரஜாகாத காரணத்தால் வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. ன்றமுன்னதாக ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராக படப்பிடிப்பு முடிந்து தனுஷ் சற்று தாமதமாக ஆஜரானார். 

Continues below advertisement


இரு தரப்பினரிடமும் முடிவைக் கேட்டப்பின் நீதிபதி சுபாதேவி இந்த வழக்கில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா இணைந்து வாழப்போகிறார்களா இல்லை தனித்தனி வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறார்களா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்


தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்


தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தனர். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவித்திருந்தாலும் தங்களது மகன்களின் எதிர்காலத்திற்காக  மீண்டும் சேர்ந்து வாழ இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 


தற்போது யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தந்தையுடன் கொஞ்ச நாட்களும் அண்ணையுடன் கொஞ்ச நாட்களும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் தனுஷ் தனது குடும்பத்துடன் இணைந்து விடுவார் என்கிற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீப காலங்களில்  தனுஷ் ஐஸ்வர்யாவின் சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்து  லைக் செய்திருந்தார்.


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த வழக்கு அக்டோபர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது முறையாகவும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்  இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நவம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கும் நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது.