நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனுஷூக்கு பிரபல இயக்குனர் பாரதி ராஜா டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என் மீது பேரன்புகொண்ட பாசத்துக்குரிய பிள்ளை தம்பி தனுஷ் மென்மேலும் வெற்றிமேல் வெற்றிப் பெற்று எல்லா வளங்களுடன், மகிழ்வுடன், சிறப்புடன் வாழ இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்”. இவ்வாறு பதிவிட்டுள்ளார். 






நடிகை அபர்ணா முரளி கேப்டன் மில்லர் படத்தின் டீசரை இன்ஸ்டாவில் பகிர்ந்து தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், உட்பட பலர் இத்திரைப்படத்தில்  நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்துவந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க, 


Rajya Sabha: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலிக்கும் மணிப்பூர் விவகாரம்..எதிர்க்கட்சியினர் கடும் அமளி..மாநிலங்களவை முடக்கம்


Star Series Notes: ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் குறியீடு இருந்தா செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு