மத்திய பிரதேசத்தில் பைக் சாவியை தரமறுத்த மகனை தந்தை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சமீப காலமாக பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கும் பட்சத்தில் வாரிசுகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களைப் பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் திக்கு முக்காடச் செய்துள்ளது. 


மத்தியப் பிரதேசம் மாநிலம்  தாமோஹ் மாவட்டத்தில் உள்ள போபாய் என்ற இடத்தில் 30 வயது நபர் ஒருவர் தனது தந்தை மற்றும் சித்தப்பாவை கோடாரியால் வெட்டுவதற்கு முன்பு அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து தாக்கியதால் இறந்தார். இந்த சம்பவம் குறித்து  தாமோஹ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி ஆர் டெனிவர் கூறுகையில், மோட்டி கச்சி என்பவர் தனது மகன் சந்தோஷ் தன்னுடைய  பைக்கின் சாவியை கொடுக்க மறுத்ததற்காக அவரை தாக்கி உள்ளார். தனது மகன் சந்தோஷை தாக்கிவிட்டு மோட்டி கச்சி போலீசில் சரணடைந்தார், மேலும் அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெனிவர் கூறினார்.


இந்த சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சந்தோஷின் மனைவி கூறியதாவது,  எனது மாமனார் மோட்டி கச்சி அவரின் பைக்கின் சாவியைக் கேட்டார், ஆனால் எனது கணவன் சந்தோஷ் பைக் சாவியை கொடுக்க மறுத்துவிட்டார்.  இது அவரது தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தகராறு செய்த சந்தோஷை, சந்தோஷின் தந்தையும் அவரது சகோதரர் ராம் கிஷனும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த சந்தோஷின் தந்தை மோட்டி கச்சி அருகில் கிடந்த கோடரியை எடுத்து சந்தோஷை தாக்கினார்.  கோடாரியால் வெட்டுப்பட்ட சந்தோஷின் இடது கை வெட்டுப்பட்டது” என்றார் கொலை செய்யப்பட்டுள்ள சந்தோஷின் மனைவி.


சந்தோஷின் கையை வெட்டிய அவரது தந்தை மோட்டி  கச்சி, கோடாரியால் வெட்டி எடுத்த சந்தோஷின் இடது கை மற்றும் கோடரியுடன் பாபாய் காவல் நிலையத்திற்கு  சென்று சரணடைந்துள்ளார். வெட்டுப்பட்ட சந்தோஷை, சந்தோஷின் மனைவி அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், அங்கு  சந்தோஷ்க்கு போதுமான முதலுதவி அளித்தும் ரத்தம் என்பது தொடர்ந்து வெளியேறி கொண்டே இருந்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சந்தோஷ் ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தாமோஹா மாவட்டம் மட்டுமில்லாது, மத்திய பிரதேச மாநிலத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண