தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளில்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் முதல் திரைத்துறையில் பெரிதாக சாதிக்க விரும்பும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கும் களமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு திரைத்துரையில் சில வாய்ப்புகளும் கிடைக்கின்றன. ஆனால் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி துவக்க காலத்தில் பெரியளவில் பேசப்பட்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரியளவில் கவனம் பெறவில்லை. அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே நின்றுவிட்டது. 

Continues below advertisement


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 7 ஆவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கூல் சுரேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் 


பிக்பாஸால் எதுவும் கிடைக்கவில்லை


" பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் என்னுடைய உண்மையான கேரக்டரை புரிந்துகொண்டார்கள். படங்களின் ப்ரோமோஷனுக்காக நான் அப்படி கத்திட்டு இருக்கேன் என்று புரிந்துகொண்டார். பிக்பாஸ் சென்று வந்தது எனக்கு எந்த விதத்திலும் பயனுள்ளதாக இல்லை. எனக்கு மட்டுமில்லை பிக்பாஸ் சென்று வந்த பலருக்கு எந்த இதுவும் இல்லை. காரணம் என்னவென்றால் பிக்பாஸ் போவதற்கு முன்பு எல்லாரும் சீரியலில் நடித்திருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் சென்று வந்ததும் அவர்களுக்கு கர்வம் ஏறிவிடும். சம்பளம் அதிகமாக கேட்பார்கள். இதனால் அவர்களிடம் இருந்த வேலையும் போய்விட்டது. சினிமாவிற்கு ஏதாவது சின்ன கதாபாத்திரங்களுக்கு கூப்பிடுவார்கள். கடைசியில் யூடியூப் அல்லது ரீல்ஸில் ஏதாவது வீடியோ போடும் நிலமைக்கு வந்துவிடுவார்கள். பிக்பாஸ் போய் வந்த கொஞ்ச நாட்களுக்கு நம்மை கல்யாணம் , காதுகுத்து , கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவார்கள். நாம் போய் ரிப்பன் கட் பண்ணிட்டு வருவோம். நாம் பெரியாளாகி விட்டதாக நினைப்போல் . அதோடு அவ்வளவு தான் . இதுதான் எல்லாருக்கும் நடக்கும் . " என கூல் சுரேஷ் பேசியுள்ளார்


பிக்பாஸ் 9


பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 50 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை நந்தினி , பிரவீன் காந்தி , அப்சரா சிஜே , ஆதிரை , துஷார் , பிரவீன் , கெமி , திவாகர் , கலையரசன் ஆகியோர் எலிமினேஷ் செய்யப்பட்டுள்ளார்கள். கானா வினோத் , சுபிக்‌ஷா , சாண்ட்ரா , பிரஜின் , கனி , விஜே பாரு , விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியை தொடர்கிறார்கள்.