கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் கருவறை வாயிலில் உள்ள துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள், 2019-ல் நடைபெற்ற பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளின் போது அகற்றப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அந்தத் தகடுகளை சிலைகளில் பொருத்திய போது, சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கம் மாயமானதாகவும், திருடப்பட்டதாகவும் புகாரும் குற்றச்சாட்டும் எழுந்தன. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக மலையாள ஊடகங்களில் தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்த வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஏற்கனவே பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ். வாசு உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட முராரி பாபு மற்றும் வாசு ஆகியோர் அளித்த வாக்கு மூலங்களின் அடிப்படையில், மற்றொரு குற்றவாளியான பத்ம குமாருக்கு SIT சார்பில் இரு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. விசாரணைக்குப் பிறகு, போதிய சாட்சியங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சராகவும் இருந்துள்ளார். 4 கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் மொத்த கேரளாவை மட்டும் இல்லாமல், ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐயப்ப பக்தர்கள் தங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறிய பின்னர் ஐய்யப்பனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க உண்டியலில் பணம், பொருள், தங்கம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
இப்படி பக்தர்கள் சிறுக, சிறுக காணிக்கையாக செலுத்திய தங்கத்தை வைத்து, கோவிலின் கற்பகிரகம் தொடங்கி பல சன்னதிகளில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இப்படி இருக்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் (கருவறை வாயிலில்) உள்ள துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள், பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளின் போது அகற்றப்பட்டன.பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அந்தத் தகடுகளை சிலைகளில் பொருத்தியபோது, சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கம் மாயமானதாகவும், திருடப்பட்டதாகவும் புகாரும் குற்றச்சாட்டும் எழுந்தன. இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் நடிகர் ஜெயராமை விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அழைத்துள்ளது. மேலும் இவர் தொடர்ந்து சபரிமலைக்குச் செல்வார் என்பதால், அவரிடத்தில், சாட்சியாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டிருப்பதாக, மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.