Cool suresh: ‛என்னைப் பார்த்து சிம்பு இப்படி சொல்லிட்டாரே...’ -கதறி அழுத கூல் சுரேஷ்

5 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

தன்னைப் பற்றிய பேசிய நடிகர் சிலம்பரசன் குறித்து நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”.. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 5 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த ஒரு வருடமாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான பிரமோஷனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கூல் சுரேஷ். ஒவ்வொரு வாரமும் ஏதேனும்  படம் வெளியாகும் போது, அதைப் பார்த்து விட்டு வெளியே வந்து வெந்து தணிந்தது காடு...என தொடங்கி அப்படத்தை பற்றி கருத்து சொல்வார். 

 

இதற்கிடையில் பட ரிலீஸூக்கு முந்தைய நாள் நடிகர் சிம்பு உட்பட படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது கூல் சுரேஷூக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக கூறினார். காரணம் அவர் தான் எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு..சிம்புவுக்கு வணக்கத்த போடு  என படத்தின் பெயரை சொல்லி சொல்லி ப்ரோமோஷன் செய்தார் என தெரிவித்தார். 

இந்நிலையில் சிம்பு சொன்னதற்கு கண்ணீர் மல்க கூல் சுரேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்ன சில பேர் திட்டுனாலும், பல பேர் சப்போர்ட்டா இருக்கீங்க. மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரோமோஷன் பண்ணது நான் தான்னு ரசிகர்கள் சொல்றாங்க. நான் சிம்பு மேல உள்ள ஆசையில் தான் இப்படி பண்ணேன். யாரும் நான் ப்ரோமோஷன் பண்ணதுக்காக பணம் கொடுக்க சொல்றீங்க.அது வேணாம். என் கார் கண்ணாடி உடைஞ்சதுக்கும் நஷ்ட ஈடு கொடுக்க சொல்றாங்க. 

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் நான் அதெல்லாம் எதிர்பார்த்து எதுவும் பண்ணல. தலைவன் சிம்புவுக்காக மட்டும் தான் இதை பண்ணேன். சிம்பு கூட சொன்னாரு தியேட்டருக்கு வந்தா எனக்கு கூட இவ்வளவு வரவேற்பு இருக்குமான்னு. உனக்கு இருக்கு. நீ அதை தக்க வச்சிக்க. இந்த மாதிரி எந்த ஹீரோவாது சொல்வாங்களா. ஒருத்தன் முன்னுக்கு வர்றது பிடிக்காம அவனை ஒழிக்க நினைப்பாங்களே தவிர யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் நான் பிரபலமாக இருந்தாலும் வீட்டுக்கு வாடகை குடுக்க முடியாம, வண்டிக்கு ட்யூ கட்ட முடியாம தான் இருக்கேன். என் என்னைப் பத்தி தப்பு தப்பா பேசுறீங்க. அப்படி என்ன நான் துரோகம் பண்ணிட்டேன் என கூல் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola