Video Viral Viruman: ”காதலி அதிதியைப் பார்த்து சில்லறையை சிதறவிட்ட கூல் சுரேஷ்” - வைரல் வீடியோ

மதுரை வீரன் பாட்டை ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கி விட்டு ஹீரோயின் அதிதியை யுவன் பாட வைத்ததாக எழுந்த சர்ச்சைக்கு ராஜலட்சுமியே முற்றுப்புள்ளி வைத்தார். 

Continues below advertisement

விருமன் படம் பார்த்த நடிகர் கூல் சுரேஷ் ஹீரோயின் அதிதி குறித்து கருத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியாகியது.  

காலையிலேயே முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.  முன்னதாக  படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. படம் குறிப்பிட்ட சாதி குறித்து எடுக்கப்பட்டுள்ளதற்கு கார்த்தி அப்படி எல்லாம் இல்லை என விளக்கமளித்தார். இதேபோல் மதுரை வீரன் பாட்டை ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கி விட்டு ஹீரோயின் அதிதியை யுவன் பாட வைத்ததாக எழுந்த சர்ச்சைக்கு ராஜலட்சுமியே முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்நிலையில் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கூல் சுரேஷ் படம் பார்த்த நிலையில் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அதில் அதிதி நடிப்பை திரையில் பார்த்தேன். ”என்னுடைய காதலி அதிதியைப் பார்த்து சில்லறையை சிதற விட்டவர்களில் நானும் ஒருவன்” என கூறி தரையில் கிடந்த சில்லறை நாணயத்தை எடுத்து காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola