ஜெய், அதுல்யா நடித்துள்ள எண்ணித் துணிக படத்தை பார்த்து நடிகர் கூல் சுரேஷ் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் 'பகவதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஜெய் அறிமுகமானார். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். தற்போது காஃபி வித் காதல்,பிரேக்கிங் நியூஸ், கோபி நயினாருடன் ஒரு படம் என தொடர்ந்து ஜெய் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எண்ணித் துணிக”. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் பார்த்த பலரும் எண்ணித் துணிக நன்றாக இருப்பதாகவும்,ஜெய் மீண்டும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல நடிகரான கூல் சுரேஷ் படம் பார்த்து விட்டு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது படம் சூப்பராக இருப்பதாக கூறி ஜெய், இயக்குநர் வெற்றிச்செல்வன், படத்தின் விநியோகஸ்தகர் உள்ளிட்ட அனைவரையும் தனது ஸ்டைலில் வெந்து தணிந்தது காடு ... ஜெய், வெற்றிச் செல்வனுக்கு வணக்கத்தைப் போடு என தனது வாழ்த்தை தெரிவித்தார்.
அப்போது ஹீரோயின் அதுல்யா பற்றி பேசிய கூல் சுரேஷ், அவர் தர்பூசணி பழத்தில் ஐஸ்கிரீம் கொட்டியது போல சூப்பராக இருக்கிறார். அதுல்யா ஐ லவ் யூ என கூறிய கூல் சுரேஷ் செமயா இருக்கீங்க.. என ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது அதுல்யாவுக்கு மட்டுமே என கூறி அனைவரும் படம் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். கூல் சுரேஷ் அனைத்து படங்களுக்கும் தனது ஸ்டைலில் வாழ்த்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்