இந்தியன் 2
கமல்ஹாசனின் இந்தியன் 2 (Indian 2) படத்துக்கு நடிகர் கூல் சுரேஷ் குதிரையில் வந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஷஙகர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது இந்தியன் 2. லைகா ப்ரோஷக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் இன்று அதிகாலை ஒன்பது மணி முதல் தொடங்கின. இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே இந்தியன் 2 படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கமலின் டைட்டில் கார்டு முதல், ஆக்ஷன், பாடல் காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான உருவாக்கத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்கு நடிகர் கூல் சுரேஷ் (Cool Suresh) குதிரையில் இந்தியன் தாத்தா கெட் அப் போட்டு வந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பெரிய படத்திற்கு அந்த படத்தின் கெட் அப் போட்டுச் சென்று கவனத்தைப் பெறும் கூல் சுரேஷ், இந்தியன் 2 படத்திற்கு சற்று வித்தியாசமாக சென்றுள்ளார்.
குதிரையில் வந்த கூல் சுரேஷ்
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது கமல் மீதான தனது மதிப்பை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தியபடி இருந்தார்.தற்போது தானும் கமல் ரசிகர் என்பதை காட்டும் வகையில் இந்தியன் தாத்தா கெட் அப் போட்டு திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்துள்ளார். கூல் சுரேஷின் லுக்கை பார்த்து நெட்டிசன்கள் “இது இந்தியன் தாத்தா லுக் மாதிரி இல்லை, கூர்கா லுக் மாதிரி இருக்கு” என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.