தமிழ் சினிமாவில் ஒரு காமெடியான கலக்கிய ஏராளமானோர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர்களின் அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அப்படி 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் கலக்கிய ஒரு காமெடியன் தான் நடிகர் சார்லி. அவர் தன்னுடைய மகன் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகின்றன.  


 




1983ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதிகமான பட்ட படிப்பு எல்லாம் படித்து இருந்தாலும் நடிப்பின் மீது அவருக்கு இருந்த தீராத ஆசையால் அவருக்கு கிடைத்த நல்ல அரசு வேலையை கூட உதறிவிட்டு நடிகனாக தான் ஆக வேண்டும் என பிடிவாதமாக நடிக்க வந்துவிட்டார். 


காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கமல், ரஜினி, அஜித், விஜய், முரளி, கார்த்திக், பிரபு, பிரஷாந்த் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக வெற்றி கொடி கட்டு, காதலுக்கு மரியாதை, ப்ரெண்ட்ஸ், அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. சமீபத்தில் கூட இறைவன், ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ்நாடு மாநில அரசு விருது, கலைமாமணி விருது, கலைச்சிகரம் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 


 



இந்நிலையில் நடிகர் சார்லி அவரின் மகன் அஜய் தங்கசாமியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


சார்லி மகன் அஜய் தங்கசாமி - பெர்மிசியாடெமி திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.