ஆர் ஜே பாலாஜி போஸ் வெங்கட் மோதல்
நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் நடிகர் போஸ் வெங்கட் இடையில் நாளுக்கு நாள் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் தொடங்கியது கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் போஸ் வெங்கட். " ஒரு தலைவன் தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும் . அவனை படிக்க வைக்கணும் அறிவை வளர்க்க வேண்டும். அப்படிபார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிறைய நடித்து எங்களுக்கு நிறைய படங்களை கொடுத்த பிறகு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்" என போஸ் வெங்கட் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்த்து அவரது பேச்சு அமைந்தது.
போஸ் வெங்கட் பற்றி ஆர்.ஜே பாலாஜி
இதே நிகழ்வில் அடுத்தபடியாக பேசிய ஆர்.ஜே பாலாஜி போஸ் வெங்கட்டின் கருத்திற்கு எதிராக பேசினார். இதுகுறித்து சமீபத்தில் அவர் விளக்கமும் அளித்தார் " கங்குவா இசை வெளியீட்டில் எனக்கு முன்பாக பேசியவர் அந்த மேடையை தவறாக பயண்படுத்தி தனது தனிப்பட்ட கருத்துக்களை பேசியதாக எனக்கு பட்டது. என்னைப் பொறுத்தவரை அரசியலுக்கு வந்து தான் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி இருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவர் வரவே கூடாது என்று ஏன் எதிர்க்க வேண்டும். தனது கரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் நான் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன் அதனால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். அவர் வருவதற்கு முன்பே ஏன் அவரை எதிர்க்க வேண்டும். " என ஆர்.ஜே பாலாஜி விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். போஸ் வெங்கட்டிற்கு சரியான பதிலடி என இந்த காணொளியை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். இப்படியான நிலையில் போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மறைமுகமாக ஆர்.ஜே பாலாஜியை தாக்கும் படி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆர்.ஜே பாலாஜியை தாக்கினாரா போஸ் வெங்கட்
தனது எக்ஸ் தளத்தில் போஸ் வெங்கட் இப்படி பதிவிட்டுள்ளார் ' வாய்ப்புகளுக்காக யாரையும் போற்றுவர்.. அதே வாய்ப்புகளுக்காக யாரையும் தூற்றுவர்.. எத்தனை பெரியார் வந்தாலும் போதாது..( சாயம் வெளுக்கும்)" இந்த பதிவு ஆர்.ஜே பாலாஜி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது குறித்தான பதிவாக பலர் புரிந்துகொள்கிறார்கள்