நடிகர் பரத்தின் 50-வது படமான லவ் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தனது 50-வது படம் குறித்தான அனுபவத்தை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார் நடிகர் பரத்


மலையாள ரீமேக் லவ்..


மலையாளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் லவ். இந்தப் படத்தை தற்போது தமிழில் தயாரித்து ரீமேக் செய்திருக்கிறார் ஆர்.பி.பாலா. பரத், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ரானீ ராஃபேல் பின்னணி இசையமைத்திருக்கிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லவ் படத்தின் டிரைலர் கடந்த ஜூலை 13-ஆம் தேது இணையதளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரத் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.


ஒரு படத்தை வெளியிடுவதற்குள் மிகப்பெரிய மனவுளைச்சல்..


தமிழ் சினிமாவில் நடிகர் பரத் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை பரத் சந்தித்திருக்கிறார். வெயில், எம் மகன், வானம் , என வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் அவரது பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. திறமைகள் இருந்து அதிகளவிலான வாய்ப்புகள் கிடைக்காதவர்களில் பரத் ஒருவர் என்று சொல்லலாம். தனது 20-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பரது தந்து 50 படமாக லவ் படத்தில் நடித்துள்ளார். தனது 50-வது படம் குறித்து பரத் தெரிவித்ததாவது “இந்தப் படத்தில் பெரிய அளவிலான மசாலா காட்சிகள் ஏதும் இல்லை ஆனால் 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நீங்கள் இதை உட்கார்ந்து ரசித்து பார்க்க முடியும். ப்ரு படத்தை எடுத்து முடிப்பதுடன் அது முடிவதில்லை. அதற்கு பிறகு அந்தப் படத்தை வெளியிடுவது வரை அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஒரு ஏற்படும் மனவுளைச்சல் என்பது மிக அதிகம்.” .என்று பரத் கூறினார்.


டிரைலர் எப்படி?


பரத் மற்றும் வானி போஜன் ஆகிய இருவேறு ரசனைகளைக் கொண்ட நபர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு இடையில் தொடர்ச்சியான சண்டைகள் ஏற்படுகிறது. இப்படியான ஒரு சூழலில் ஒரு சின்ன சண்டையில் வானி போஜனை பரத் அடிக்க அவர் இறந்துவிடுகிறார். இந்த கொலையை மறைக்க தனது நண்பனின் உதவியை நாடுகிறார் பரத். இப்படி தொடர்கிறது லவ் படத்தின் கதை. வரும் ஜூலை 28-ஆம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.