பிரபல இசையமைப்பாளருடனான தனது முன்னாள் மனைவியின் காதல் குறித்து நடிகர் பாலா பதிலளித்துள்ளார்


இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான ‘வீரம்’ புகழ் பிரபல நடிகரான பாலா, பாடகி அம்ருதா சுரேஷை மணந்தார். அவருக்கு 2012ல் அவந்திகா என்ற மகளும் பிறந்தார். மூன்று வருடங்கள் பிரிந்து வாழ்ந்த இருவரும் 2019ல் விவாகரத்து செய்தனர். அதன்பிறகு வாழ்க்கையில் முன்னேறிய பாலா இப்போது டாக்டர் எலிசபெத்தை மணந்துள்ளார்.


இதற்கிடையில் அம்ருதா சுரேஷ் தற்போது இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகி தனது காதலனுடன் நெருக்கமான புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அம்ருதாவின் சகோதரியான அபிராமி சுரேஷ், மூவரும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மறைமுகமாக அதை உறுதிப்படுத்தி, ‘கோபி என் சகோதரியை சிரிக்க வைக்கிறார். என்னை அவரது மூத்த மகள் என்று அழைக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.






முன்னாள் மனைவி காதல் குறித்து


இந்த நிலையில், தனது முன்னாள் மனைவி காதல் குறித்து பேஸ்புக் வீடியோவில் பாலாவிடம் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டது. அதற்கு மலையாளத்தில் அவர் தனது மனைவி எலிசபெத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்கள் ஒரு புதிய வீட்டையும் கூட வாங்கியிருப்பதாகவும்  பதிலளித்தார். எவ்வாறாயினும், தனது முன்னாள் மனைவியின் புதிய காதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், அவர் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாக கூறினார்.


கோபி சுந்தர் மலையாளம் மற்றும் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தவிர தமிழில் ‘யாருடா மகேஷ்’, ‘பெங்களூரு நாட்கள்’ மற்றும் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண