Actor Bala : நான்காவது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா...மணப்பெண் யார் தெரியுமா ?

தனது முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் பாலா நான்காவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார்

Continues below advertisement

 நடிகர் பாலா

2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா . இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இளைய சகோதரனாவார். காதல் கிசு கிசு , கலிங்கா , அண்ணாத்த , வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பாலா சந்தனா சகாசிவா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இது குறித்து அவர் வெளிப்படையாக பேசியதில்லை. அடுத்து பாலா கடந்த 2019 ஆம் ஆண்டு அம்ருதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாலா 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்பரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் முறையாக பதிவு செய்யப்படாமல் இருந்த நிலையில் ஒரு சில மாதங்களில் இருவரும் பிரிந்தார்கள். 

Continues below advertisement

பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா மற்றும் தனது மகளை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறை அவரை கைது செய்தது. காவல் விசாரணை முடிந்து வெளியான அடுத்த சில நாட்களில் தனது முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் பாலா

 நான்காவது திருமணம் செய்துகொண்ட பாலா 

இன்று அக்டோபர் 23 ஆம் தேதி எர்ணாகுளம் பாவாக்குளம் ஶ்ரீ மகாதேவா திருக்கோயிலில் பாலா மற்றும் அவரது முறைப்பெண் கோகிலாவுக்கு திருமணம்  நடைபெற்றது. கோகிலாவுடன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் பாலா. திருமணம் முடிந்த கையோடு செய்தியாளர்களிடம் பேசிய பாலா இப்படி கூறினார் " கோகிலா என்னுடைய உறவுக்கார பெண். அவரது சின்ன வயசு ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. எனக்கு லிவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் என்னுடைய உடல் நலம் இப்போது கொஞ்சம் தேறி வருகிறது. இதனால் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை தேவைப்பட்டதாக உணர்ந்தேன். அது என்னுடைய உறவினராக இருந்தால் எனக்கு ஆதரவாக இருக்கும். எல்லா சூழலிலும் கோகிலா என்னுடன் இருந்திருக்கிறார். என் அம்மாவின் வயது காரணமாக அவரால் இந்த திருமணத்திற்கு வர முடியவில்லை" என பாலா தெரிவித்துள்ளார்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola