நேற்றைய தினம், சுமார் 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன், மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட நிலையில்,  விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். சிறு காயங்களோடு உயிர் பிழைத்த ஒரே ஓரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில், 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள் என்றும், 7 பேர் போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கெனடியன் என கூறப்படுகிறது. தற்போது உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆவார்.” என ஏர் லைன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் மீது மோதியதில், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கடுமையான காயமடைந்ததோடு... சிலர் இறந்தும் உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரியில் தான் பாலாவின் 3 ஆவது மனைவி எலிசபெத் உதயன் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  பாலா மற்றும் அவரது 4 ஆவது மனைவி கோகிலாவும்  விமான விபத்து குறித்து கவலை தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளனர். இது குறித்து பாலா போட்டுள்ள பதில்,  "அகமதாபாத் விமான விபத்து செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. எப்படி ஆறுதல் கூற முடியும். எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது முன்னாள் மனைவி  டாக்டர் எலிசபெத் பற்றி உருக்கமாக நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் என நினைக்கிறன் என பதிவு போட்டு இருந்ததால் பலர் பாலாவின் முன்னாள் மனைவிக்கு என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

 

இதற்கு, எலிசபெத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுக்கும் விதத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில், 'தான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த எலிசபெத்... தனது கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள அவரது சக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் காயமடைந்துவிட்டதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் பாலா கடந்த 2021 - ஆம் ஆண்டு, மருத்துவர் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவரை பிரிந்த பின்னர் தற்போது கோகிலா என்பவரை 4 ஆவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.