அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... வேறு ஒரு உறவில் இருந்தாரா திவ்யா? - வெளியான அர்னவ் ஆடியோவால் அதிர்ச்சி!

திவ்யாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சகித்து கொள்ள முடியாமல் திவ்யாவின் தகாத உறவு பற்றி அம்பலப்படுத்திய அர்னவ்.

Continues below advertisement

சின்னத்திரை பிரபலங்களான திவ்யா - அர்னவ் பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரம் எடுத்து இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறி வருகிறது. சில நாட்கள் இது குறித்த எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்த  நிலையில் தற்போது ஒன்றின் பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அந்தரங்க ரகசியங்களை வெளிப்படையாக அம்பலப்படுத்தி வருகிறார்கள். 

Continues below advertisement

திவ்யாவின் குற்றச்சாட்டு :

செவ்வந்தி சீரியல் திவ்யா சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டின் படி அர்னவ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து விட்டு அவர்களை ஏமாற்றி முடிந்த அளவு அவர்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு நடுத்தெருவில் நிர்கதியாக விட்டுவிட்டார் என கூறியிருந்தார். மேலும் ஒரு படி மேலே போய் ஜஸ்டின் என்ற பைலட்டுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு ஆசை வார்த்தைகளை சொல்லி அவரையும் ஏமாற்றி பணம்   பறித்து ஏமாற்றியுள்ளார். இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத அந்த பைலட் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். திருநங்கை ஒருவருடனும் இலங்கை பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து விட்டு பின்னர் அவர்களை கழட்டி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் திவ்யா. அதற்கான ஆதாரங்கள் கூட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

 

 

அர்னவ் ஆடியோ :

திவ்யாவின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சட்டுகளால் கடுப்பான அர்னவ், "திவ்யா பற்றின ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம் என நினைத்தேன். பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு நான் அவர் பற்றின உண்மைகளை வெளியிட வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இன்று அவர் என்னை பற்றி இப்படி அடுக்கடுக்காக  குற்றங்களை கூறி வருவதால் நான் இனி அமைதியாக இருக்க முடியாது" எனக்கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

திவ்யாவின் தகாத உறவு :

”திவ்யாவும் நானும் ஐந்து ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். அந்த சமயத்திலேயே அவர் விவாகரத்து பெற்றுவிட்டார் என கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் கணவரை எங்களின் திருமணத்திற்கு முன்னர் தான் விவாகரத்து செய்துள்ளார். இதை மறைத்து என்னோடு 15 நாட்களும் கணவரோடு 15 நாட்களும் குடும்பம் நடத்தியுள்ளார். இப்படிபட்ட கேவலமாக உறவுக்கு என்ன பெயர். இந்த தகாத உறவு பற்றி கேள்விப்பட்டு நான் சுமார் ஒன்றரை மாதம் திவ்யாவுடன் பேசாமல் இருந்தேன். 

அதே போல என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது இரவு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் திவ்யா. செய்யாத குற்றத்திற்காக நான் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த வேதனையில் இருக்கிறேன். அவரின் தகாத உறவு குறித்து தெரிந்தால் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லாமல் இருந்தேன். நிச்சயமாக அவர் யாருடன் தகாத உறவில் இருந்தார் என்ற உண்மையை விரைவில் வெளியிடுவேன்” என்றுள்ளார் அர்னவ். 

மேலும் நான் ஜஸ்டின் என்பவருடன் ஓரின சேர்கையில் இருந்ததாகவும் அவர் என்னால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அப்படி அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதை இறப்பு சான்றிதழ் மூலம் திவ்யாவால் நிரூபிக்க முடியுமா? ஜஸ்டின் என்பவர் ஒரு மாடல். அவர் உயிருடன் தான் இருக்கிறார். விரைவில் அவரையும் உங்கள் முன்னால் நிறுத்துகிறேன் என சவால் செய்துள்ளார் அர்னவ். 

Continues below advertisement
Sponsored Links by Taboola