தென்னிந்தியாவின் ஆக்‌ஷன் நடிகர்களுள் பிரபலமானவர் நடிகர் அர்ஜூன். தற்போது 59 வயதாகும் அர்ஜூன், 80கள் மத்தியில் தொடங்கி பல ஹிட் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


சுதந்திர தினத்தில் பிறந்த நடிகர்


ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிறந்ததால் தேசப்பற்றுடன் வலம் வரும் நடிகர் அர்ஜூன் ஜெய்ஹிந்த், தேசிய கீதம் என நாட்டுப்பற்றை வலியுறுத்தும் பல படங்களிலும் நடித்துள்ளார்.


மேலும் கராத்தேவில் கைத்தேர்ந்தவரான அர்ஜூன், தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழில் நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். 


பசுவுடன் கொஞ்சல்


இந்நிலையில் முன்னதாக தனது மகள்கள் ஐஸ்வர்யா அர்ஜூன், அஞ்சனா சர்ஜா இருவருடன் சேர்ந்து பசு ஒன்றை கொஞ்சி மகிழும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.






வட இந்தியாவின் Gau Seva எனப்படும் பசுப் பாதுகாப்பு இயக்கத்தவரைச் சேர்ந்தவரால் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது. பிரபலங்கள் பலரும் நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளை செல்லங்களாக வைத்திருக்கும் நிலையில், அர்ஜுனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பசுக்கள்தான் ஃபேவரைட்.. ரேஷன் கார்டில் சேர்த்துக்கொள்ளாத குறைதான்.




மேலும் படிக்க: Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!


Bigg Boss 6 Tamil Contestants: விரைவில் பிக்பாஸ் 6! ரெடியாகுது போட்டியாளர்கள் லிஸ்ட்! வெளியான பெயர்கள் இதோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண