ஐஸ்வர்யா அர்ஜூன்


தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் என்று கொண்டாடப் பட்ட நடிகர் அர்ஜூன். தேசப் பற்றை ஊக்குவிக்கும் வகையில் அவர் நடித்த பல படங்கள் 90ஸ் கிட்ஸ்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹீரோ, வில்லன், துணை நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் ஹரோல்டு தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் மற்றும் அர்ஜூன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் விடாமுயற்சி என்பது குறிப்பிடத் தக்கது. நடிகர் அர்ஜூனுக்கு ஐஷ்வர்யா அர்ஜூன் மற்றும் அஞ்சனா சார்ஜா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா விஷால் நடித்த மதகஜ ராஜா படத்தில் நாயகியாக அறிமுகமானார்.  தந்தையின் வழியை பின்பற்ற்ய ஐஸ்வர்யாவுக்கு சினிமா பெரியளவில் கைகொடுக்க வில்லை.


ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு தம்பி ராமையா மகனுடன் திருமணம் 






இப்படியான நிலையில் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவல் என்கிற ரியாலிட்டி ஷோவின் போது ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு இடையில் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் அவரவர் வீட்டில் பேசி தங்கள் காதலுக்கு குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இரு வீட்டாரின் முன்னிலையில் இந்த ஜோடிக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது. வரும் ஜூன் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண நிச்சயத்தைத் தொடர்ந்து தனது நண்பர்களுடம் பாலி சென்று பேச்சுலர் பார்ட்டியை கொண்டாடினார் ஐஸ்வர்யா. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு முந்திய நிகழ்ச்சிகளான மெஹந்தி மற்றும் ஹல்தி கொண்டாட்டங்களையும் தொடங்கியுள்ளார்கள் அர்ஜூன் குடும்பத்தினர். இந்த நிகழ்வின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.