தமிழ் சினிமாவில் எல்லோரும் அவரை தல என்று செல்லமாக அழைப்பார்கள். பேச்சில் கம்பீரமும் சிரிப்பும் தான் அழகு. ஆசை படத்தில் இருந்தே ஆனழகன் என வருணிக்கப்பட்டவர். திரையுலகில் தோல்வி படங்களை அதிகம் கொடுத்த ஹீரோ யார் என்றால் அஜித் தான். ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தன்னம்பிக்கை கொண்ட நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். அதேபாேன்று கார் பந்தயம் என்று வந்து விட்டால் வேகம் குறையாது, போட்டி என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான் என ரசிகர்களே தெரிவிக்கின்றனர். 

நடிப்பு எந்த அளவிற்கு அஜித்திற்கு பிடிக்குமோ அதேபோன்று கார் பந்தயத்தை அதைவிட அதிகமாக நேசிக்கிறார். தனது பெயரில் கார் பந்தய கம்பெனி ஒன்றையும் வைத்துள்ளார் அஜித். சினிமா, கார் பந்தயம் என்று இருந்தாலும் குடும்பத்திற்காக நேரம் செலவிட தவறியது இல்லை. அவ்வப்போது அவரது காதல் மனைவி ஷாலினிக்கு பிடித்த போட்டிகள், படங்களையும் கண்டு ரசிப்பதும் உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த காதல் ஜோடிகளில் அஜித் -ஷாலினியும் இருக்கிறார்கள். அமர்க்களம் படத்தில் நடித்தபோதே இருவருக்கும் காதல் உருவானது. பிறகு திருமணம் குடும்பம் குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக அஜித்திற்கு பக்கபலமாக ஷாலினி இருக்கிறார். இதனை அஜித்தே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குடும்பம் எனது பலம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ஆடி மாதத்தில் தமிழக மக்கள் அனைவரும் இன்று வரலட்சுமி பூஜையை சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அந்த வகையில் அஜித்தும் - ஷாலினியும் வரலட்சுமி பூஜையையொட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஷாலினி அஜித் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார். அதன் பிறகு அஜித் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்றதும் ஷாலினி கலகலப்பாக சிரித்தார். அஜித் - ஷாலினி தம்பதியின் க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.