தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜீத். இவரது திரைப்படங்கள் ரிலீஸ் என்றால் திரையரங்கில் திருவிழா போல கூட்டம் நிரம்பி வழியும். அஜீத்குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லண்டனில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் அஜீத் நேற்று லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் செல்லும்போது அங்கே இருந்த பெண் ஒருவர் அஜீத்தைப் பார்த்து செல்பி எடுக்க கேட்டார். அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் அஜீத்குமார் அந்த பெண்ணைப் பார்த்து
“நோ மா.. நோ… சாரி” என்று மன்னிப்பு கேட்டுச் சென்றார்.






இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜீத் அந்த பெண்ணிடம் நடந்து கொண்ட விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல நடிகராக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்பி எடுக்க முடியாததற்கு மன்னிப்பு தெரிவித்த குணத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.




பின்னர், விமான நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்கள் உள்ளிட்ட பலருடனும் அஜீத் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அவரிடம் செல்பி கேட்ட அந்த பெண்ணையும் அழைத்து அந்த பெண்ணையும் சேர்த்து  புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  






மேலும், விமான நிலையத்தில் பணியாற்றிய பாதுகாப்பு படை அதிகாரிகள் நடிகர் அஜீத்தை பரிசோதனை செய்தனர். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜீத் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜைகள் தொடங்கப்பட்ட பிறகு பெரியளவில் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏகே 61 படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட இருப்பதாக மட்டும் தகவல் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண