காட்டில் தனிமையில் ரிலாக்ஸாக அஜித் குமார் உடகார்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


அஜித் குமாரின் பயணம்


 நடிகர் அஜித் குமார் தற்போது தனது நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது நண்பர்களுக்கு அஜித் பிரியாணி சமைத்துக் கொடுப்பது, இளம் பைக் ரைடர்களுக்கு பயிற்சி அளிப்பது என தினந்தோறும் அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடன் கேலரியில் சேர்ந்து வருகின்றன.


இந்தப் புகைப்படங்களை அஜித்தின் மேலாலர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் அஜித் குமாரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. ஒன்றில் அஜித் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் காட்டில் தனிமையை ரசித்தபடி அஜித் அமர்ந்திருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.