நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெறும் கார்பந்தையத்தில் பங்கேற்று வருகிறார். 12 மணி நேர போட்டிப்பிரிவில் அஜித்தின் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அஜித்தை காண மலேசியாவில் பல திசைகளில் இருந்து ரசிகர்கள் குவிந்து வருகிறார். இதனால் மற்ற ரேஸிங் அணிகளுக்கு தொந்தரவு ஏற்படாதபடி ரசிகர்களிடம் அஜித் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
மலேசியாவில் அஜித் குமார் ரேஸிங்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் AK64 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தையங்களில் போட்டியிட்டு வந்த அஜித் தற்போது மலேசியா சென்றுள்ளார். செபாங் நகரச்த்தில் நடைபெற்று வரும் மிச்லின் 12 மணி நேர போட்டியில் அஜித் தனது ரேஸிங் குழுவுடன் கலந்துகொண்டார். இதில் 24hrs Creventic Series போட்டியில் அஜித் குமாரின் அணி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
500 ரசிகர்களுடன் புகைப்படம்
12 மணி நேரம் கார் ஓட்ட கடுமையாக பயிற்சி எடுத்து வரும் அஜித் கிடைத்த நேரத்தில் தன்னை காண வந்த ரசிகர்களையும் உற்சாகபடுத்தி வருகிறார். தன்னை காண வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் அஜித் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ரசிகர்களுக்கு அறிவுரை
அஜித்திற்காக திரண்ட கூட்டத்தால் போட்டியில் கலந்துகொண்ட மற்ற ரேஸிங் அணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை உடனே கவனித்த அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . " தயவு செய்து மற்ற போட்டியாளர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இதில் என்னுடைய நற்பெயர் மட்டுமில்லை உங்களுடைய நற்பெயரும் சம்பந்தப்பட்டிருக்கிறது. தயவு செய்து யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என எல்லாரிடமும் சொல்லுங்கள்" என அஜித் இந்த வீடியோவில் தனது ரசிகர் ஒருவரிடம் கூறியுள்ளார்