நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் பற்றிய விறுவிறுப்பான ஆவணப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது . கார் பந்தையத்தில் இருக்கும் சவால்கள் குறித்து இந்த ஆவணப்படத்தில் அஜித் விரிவாக பேசியுள்ளார். விறுவிறுப்பான ரேஸிங் காட்சிகள் , ரேஸ் டிராக்கில் ஏற்பட்ட விபத்துகள் , வெற்றிகள் என ஒரு திரைப்படத்திற்கு நிகராக இந்த ஆவணப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது .
15 ஆண்டுகளுக்கு பின் கார் பந்தையத்திற்கு திரும்பிய அஜித்
15 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் அஜித் இந்த ஆண்டு மறுபடியும் கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு மோட்டர் பைக்கில் உலகம் முழுவதும் தனது அணியுடன் சுற்று பயணம் சென்றுவந்த அவர் ' அஜித் குமார் ரேஸிங்' என்கிற தனது சொந்த ரேஸிங் குழுவை தொடங்கினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற மிச்லின் 24H போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொண்டது. 991 பிரிவில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
துபாய் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற GT4 ரேஸிங்கில் அஜித் மற்றும் அவரது அணி கலந்துகொண்டு பெரியளவில் கவனமீர்த்தது. அஜித் மறுபடியும் கார் பந்தையத்திற்கு திரும்பியது அவரது ரசிகர்களுக்கு பெரியளவில் உற்சாகத்தை அளித்தது. ஒவ்வொரு நாட்டிற்கும் அஜித் கலந்துகொண்ட போட்டிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். இதனால் மோட்டர் ஸ்போர்ட்ஸ் மற்றும் அஜித்தின் ரேஸிங் அணி பக்கம் சர்வதேச அளவு கவனம் திரும்பியது
பத்மபூஷன் விருது
அஜித்தின் திரைத்துறை பணியை கெளரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதே நேரம் வெனிஸ் நாட்டில் பிலிப் சாரியோல் மோட்டார்ஸ்போர்ட் குழுமம் அஜித்திற்கு 2025 ஆண்டிற்கான சிறந்த ஜெண்டில்மேன் டிரைவர் விருது வழங்கியது.
விபத்துகள்
இந்த கார் போட்டிகளின் போது அஜித்தின் கார் பல முறை விபத்திற்கு உள்ளானது. துபாயில் ஒரு முறையும் . ஸ்பேயினில் நடந்த போட்டியில் இரண்டு முறையும் இத்தாலியில் நடந்த போட்டியில் ஒருமுறையும் அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்துகளில் சிறிய காயங்களுடன் திரும்பிய அஜித் விடாமுயற்சியை கைவிடவில்லை.
ஆவணப்படம்
அஜித்தை பற்றி ஆவணப்படம் உருவாகி வருவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்தது. அண்மையில் மலேசியாவில் அஜித் கார் பந்தையத்தில் கலந்துகொண்டபோது இயக்குநர் எ.எல் விஜய் மற்றும் சிறுத்தை சிவா இந்த ஆவணப்படத்தை எடுத்து வந்தனர். தற்போது இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ரேஸிங் என்பது நடிப்பு இல்லை என்கிற அஜித்தின் வார்த்தைகளுடன் இந்த ஆவணப்படம் தொடங்குகிறது. கார் பந்தையத்திற்கு தேவைப்படும் மன உறுதி , தனது குடும்பத்தின் தியாகம் , இந்த ஸ்போர்ட் மீடு தனக்கு இருக்கும் காதல் , இதில் உள்ள ஆபத்துகள் குறித்து அஜித் இந்த ஆவணப்படத்தில் பேசுகிறார். இந்த முன்னோட்டம் ரசிகரகளிடம் பெரியளவில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.