வலிமை படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்தநிலையில் அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வினோத்தை நடிகர் அஜித் குமார் புகழ்ந்து தள்ளியதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் அஜித், என்னுடைய சினிமா கேரியரில் வலிமை திரைப்படம் தான் பெஸ்ட் படம். நீண்ட நாட்களுக்கு பிறகு எனது ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு விருந்தாக அமையும். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நினைத்து பார்த்ததவிட ரொம்ப சூப்பரா வந்துருக்கு. 


சண்டைக்காட்சி, சென்டிமென்ட் காட்சி என எல்லாமே சிறப்பா இருக்கு. நிச்சயம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வசூலை குவிக்கும் என்று அஜித் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 ம் தேதி வலிமை படத்தில் இருந்து  ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல் ப்ரோமோ வெளியாகி யூ ட்யூப்பில் லைக்ஸ் அள்ளி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.


 






முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர்.


இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.




வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண